பாதை இல்லாததால் 2 நாட்கள் அடக்கம் செய்யாமல் வைக்கப்பட்ட மூதாட்டியின் உடல் நள்ளிரவில் அடக்கம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சின்னாக்கோன் களத்துப்பட்டியை சேர்ந்தவர் நல்லம்மாள்(வயது 90). இவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த நிலையில் சுடு காட்டிற்கு செல்ல பாதை இல்லை என்பதால் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்படாத நிலையில் இருந்ததை அடுத்து தகவலறிந்த மருங்காபுரி வருவாய்த் துறையினர் மற்றும் புத்தாநத்தம் போலீசார் சம்பந்தப்பட்ட மூதாட்டியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினார். அதாவது சுடுகாட்டிற்கு செல்வதற்கான நிரந்தர பாதை இருந்தால் மட்டுமே உடலை எடுத்துச் செல்வோம் என்று கூறிய நல்லம்மாளின் உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இறந்து இரண்டு நாட்கள் ஆனதால் முதலில் உடலை அடக்கம் செய்துவிட்டு வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கண்டு கொள்ளலாம் என்று போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். ஆனால் உறவினர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாததால் நள்ளிரவைத் தாண்டியும் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்படாமல் போராட்டம் நீடித்தது. தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து உறவினர்கள் மூதாட்டியின் உடல் இவரது 12 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.