நள்ளிரவு வரை மக்கள் பணி; அசத்தும் கவுன்சிலர் செந்தில்!
திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரை குண்டும்,

குழியுமாக இருந்த சாலையினை பணியாளர்களை கொண்டு சீரமைத்தார். தொடர்ந்து தனது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலையினை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொண்டு, தண்ணீர் குறைவாக வருவதை ஆய்வு செய்து அவற்றை சரிசெய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.