திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வி(வயது 28). இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு மதுரை மாவட்டம் பெருங்குடி போலீஸ் காலனி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தினமும் தாமரைச்செல்வியை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.