திருவெறும்பூர் தொகுதியில் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 277 பேருக்கு ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் வருவாய் துறை சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமிற்கு திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது1987 ஆம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5 லட்சம் பேரூக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும்
தமிழக முதல்வர் பதவி ஏற்ற ஓர்றாண்டுகளுக்கு 30,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் இதில் வீடு கட்டி 35 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கிடைக்கப் பெறாமல் உள்ள பலர் உள்ளதாகவும் இதில் 3 ஆயிரத்து ,200 பேருக்கு முதற்கட்டமாக பட்டா வழங்கபடுவதாகளம் மீதமுள்ள 26, ஆயிரம் பேருக்கு விரைவில் பட்டா வழங்கப்படும். பட்டா கிடைக்காதவர்கள் கவலையடைய வேண்டாம் என்று வீட்டுமனை பெற்றவர்கள் பாலிசிதாரர்களுக்கு கூட பட்டா வழங்கப்படும் என்றும் அதற்குரிய அரசு ஆணை இன்னும் 6 மாத காலத்தில் பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
மேலும்இங்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படுவது போல் மற்ற தொகுதிகளில் அமைச்சர்கள் தலைமையில் வழங்கப்படும் என்றார்.டிஆர்ஓ பழனி குமார், துணை மேயர் திவ்யா, முன்னாள் எம்எல்ஏ சேகரன் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கருணாநிதி, மண்டலத் தலைவர்கள் மதிவாணன், தர்மராஜ், திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் நீலமேகம், சிவகுமார், தாஜூதீன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருவாய் துறை சார்பில் ஒரு கோடியே 63 லட்சம் மதிப்புடைய இலவச வீட்டு மனை பட்டா 167 பேரூக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 பேருக்கு ரூ6 லட்சம் மதிப்பில் உதவித்தொகையும், 20 பேருக்கும், 50 பேருக்கு இலவச குடும்ப அட்டைகள் வழங்கி தொடங்கிவைத்ததோடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 7 பேரூக்கு ஸ்கூட்டி, 6 பேருக்கு சக்கர நாற்காலி, 6 பேரூக்கு 3சக்கர சைக்கிள், உட்பட 40 பேரூக்கு ரூ8 லட்சத்து 80 ஆயிரத்து 285 மதிப்பீட்டில் 34 பேருக்கு உதவிகள் வழங்கினர்.
திருவெரும்பூர் வருவாய்த்துறை சார்பில் 167 பேருக்கு வீட்டுமனை பட்டா 50 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்உதவித்தொகை குடும்ப அட்டைகள் 20 பேருக்கும் மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு என 670 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் பெறப்பட்ட மனுக்களில்வீட்டுமனை முதியோர் உதவித்தொகை வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகமான மறுத்ததாகவும் தமிழக முதல்வர் திருச்சிக்கு வந்த போது 1200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை அறிவித்தார் என்று அந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக இருக்க அல்லாமல் அதை செயல்படுத்துவதற்கு அமைச்சர்களின் என்ன வழி என்பதை அமைச்சர்களுடன் கலந்து பேசி வருவதாகவும் தற்போது வீடு கட்டி உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஈடுபடுவதாகவும் திருவெறும்பூர் பகுதி மட்டுமல்லாமல் திருச்சியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வழங்கப்படும் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதம்நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் வீதம் அந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஓரிரு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த நீங்கள் தான் எங்களுடைய இதமான குளிர் உங்களை மறக்க மாட்டோம் என்பதை பொருத்து மற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் நடந்து முடிந்த நகர மன்ற தேர்தலில்திருச்சி மாவட்டத்தில் உள்ள 65 வார்டுகளில் 62 வார்டுகளை திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர்.தேவையான அனைத்தையும் படிகளில் தெய்வீக செய்யும் பணி தொடரும் என்றும் கூறினார்.
தமிழக முதல்வர் உத்தரவு படி மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் கலெக்டர் தலைமையில் தீர்வு காணவேண்டும் திருச்சி மாவட்டத்தில் மிக வேகமாக பல மனுக்காக்கு தீர்வு காணப்படுவதாகவும் சில மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதற்கும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கபடும் உதவி தொகையாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக இருந்தாலும் குடும்ப அட்டை பெறுவதாக இருந்தாலும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். குஜராத் கல்வி மாநாட்டிற்கு கடைசி நேரத்தில் அழைத்ததாகவும் ஏற்கனவே மாநிலத்தில் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடு நடத்து கொண்டு இருந்தது மேலும் ஆட்சியில் இல்லாதபோதும் இருக்கும் போதும் கலைஞரின் கொள்கைப்படி மாநிலத்திற்கு என தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் நமக்கு என்ன தேவை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் திட்டமிட்டபடி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை வரும் 13ம் தேதியும் 12ம் வகுப்புக்கு 20ம் தேதியும் 11ம் வகுப்பிற்கு 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் இந்த தேதிகளில் ஊரடங்கு உள்ளட்ட பல்வேறு காரணங்களால் மாற்றம் இருந்தால் இதுகுறித்து முதல்வரின் அலுவலக அதிகாரிகள் தெரிவிப்பார்கள் அதன் அடிப்படையில் தெரிவிப்போம்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று கூறுகிறார்கள் அது மொத்தமாக தான் நாள் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் 40 ஆயிரம் பேர் எழதவில்லை. பிளஸ் 2 மாண வர்கள் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் மாணவர்கள் நாள் ஒன்றுக்கு தேர்வு எழுதவில்லை அதை பார்க்க வேண்டிய கடமை கட்டாயம் எங்களுக்கு உள்ளது. ஜூலை மாதம் மற்றும் செப்டம்பர் மாதம் தேர்வாக இருந்தாலும் வாருங்கள் உங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினார். அடுத்த மாதம் நடக்க உள்ள நீட் தேர்விற்க்கு தடை வாங்கலாம என்று கூறுபவர்கள்தான் விலக்கு அளிக்க வேண்டியவர்கள்.இந்த விழாவில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் ரமேஷ், செல்லபாண்டியன், துரை பாண்டியன்,விஏஒ அந்தோணி, மற்றும் அரசு அதிகாரிகளும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.