பொன்மலையில் அன்பில் மகேஸை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்

0 44
Stalin trichy visit

திருச்சி, ஏப்.6 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி-யை ஆதரித்து, கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி, பொன்மலைப் பகுதிக்குட்பட்ட வார்டு எண் 46-ல் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் பொன்மலைப்பட்டி ரைஸ் மில், கொட்டப்பட்டு, முறைசிட்டி விஸ்தரிப்பு பகுதி (Morais City), வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர் நகர், பொன்மலைப்பட்டி, உடையார் தெரு மற்றும் மலையடிவாரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குக் கேட்டார்.

இந்நிகழ்வின் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் வட்டக் கழகச் செயலாளர்கள் முருகன், பரமசிவம், போது, கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் உடனிருந்து ஆதரவு திரட்டினர். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு  தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.