திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்கு சேகரிப்பு

0 38
Stalin trichy visit

திருச்சி, ஏப். 6 திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் முனைவர் த. இனிகோ இருதயராஜை   ஆதரித்து, திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பகுதிகள்: வரகனேரி, கல்பாளையம் மற்றும் அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.
வாக்கு சேகரிப்பு: திமுக தலைமையிலான கூட்டணியின் “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்குக் கேட்டு ஆதரவு திரட்டினார்.
அரசு திட்டங்கள் விளக்கம்: பிரச்சாரத்தின் போது தமிழக அரசின் சாதனைகளான: மகளிர் விடியல் பயணம் & மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம்.
புதுமைப் பெண் & தமிழ்ப் புதல்வன் திட்டங்கள். ஆகியவற்றை மக்களிடம் எடுத்துரைத்து, தொகுதி மேம்பாட்டுப் பணிகளையும் விளக்கினார்.
இந்த எழுச்சிமிக்க பிரச்சாரத்தில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் தொகுதி பொறுப்பாளர் கதிரவன் மாநகரத் துணைச் செயலாளர் சந்திரமோகன் வட்டக் கழகச் செயலாளர் சாகுல் கருப்பையா மற்றும் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.