நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

0 334
Stalin trichy visit

திருச்சி, ஜன.19 திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 9 கட்டடங்களை திறந்து வைத்தும், ரூ.12.91 கோடி மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், இலவச வீட்டுமனை பட்டாக்க உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ரூ.27.90 கோடி மதிப்பீட்டில் 2539 பயனாளிக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, ஆவின் பொதுமேலாளர் முத்துமாரிதேவி, வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன், மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரண்யா, மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மண்டலத் தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழுத் தலைர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.