கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் ஆய்வு

0 419
Stalin trichy visit

திருச்சி, ஆக.9 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட59 ஆவது வார்டு கல்லுக்குழி, கள்ளர் தெரு, செங்குளம் காலனி, காஜா நகர் போக்குவரத்து அரசு கிளை அலுவலகம் போன்ற பல்வேறு இடங்களில் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்  ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்போது பொதுமக்கள் அவரிடம் குடிநீர் மேல் தொட்டி அமைத்து தருமாறும் மற்றும் பாதாள சாக்கடை அமைத்திடவும், மழை காலங்களில் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த ஆய்வில் துணை மேயர் திவ்யா மற்றும் மண்டலம் 2 கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர் கீதா, வட்டச் செயலாளர் கணேசன் மூர்த்தி கோவிந்தராஜ் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் உடனிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.