4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மராத்தான் போட்டி…
மணப்பாறையில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு ” மணவை மராத்தான்” என்ற தலைப்பில் மராத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கு 21 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 10 கிலோ மீட்டரும் ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியே 5, 3 கிலோ மீட்டர் ஓட்டமும் நடைபெற்றது. மருத்துவர் கலையரசன் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் போட்டியை தொடங்கி வைத்தனர். 21 கிலோ மீட்டர் ஆண்கள் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகில் குமார் என்பவர் முதலிடம் பிடித்தார். இதே போல் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவாக நடைபெற்ற போட்டியில் மழலைகளுக்கு 500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் கலந்துகொண்டு போட்டி போட்டு ஓடியது அனைவரின் கவனங்களையும் வெகுவாக ஈர்த்தது. இந்த மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் தங்கள் குழுவினருடன் 21 கிலோமீட்டர் முழுமையாக ஓடி ஓட்டத்தை நிறைவு செய்தார்.
