ஆங்கரையில் ஆடு திருடிய இருவர் கைது.

0 212
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை கோவிந்தராஜபுரத்தில் பட்டியில் கட்டி இருந்த ஆட்டை திருடிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்..

லால்குடி அருகே ஆங்கரை கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் 55 வயதான பழனிச்சாமி.இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் உள்ள பட்டியில் ஆடுகளை கட்டிவிட்டு தூங்கச் சென்றார். அப்போது நள்ளிரவில் ஆட்டின் சத்தம் கேட்டுள்ளது. வெளியில் வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் ஆட்டை மோட்டார் பைக்கில் தூக்கி சென்றது தெரிவந்தது. இது குறித்து பழனிச்சாமி லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் மாந்துரைப் பகுதியில் சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் லால்குடி அருகே திருமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 23 வயதான ஜெகன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா கோவிலடி வடக்கு தெருவை சேர்ந்த 33 வயதான பாபு ஆகியோர் ஆட்டைத் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் அவர்களை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆசை படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திருடிய ஆடு மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.