தேசிய பெண் குழந்தைகள் தின விழா உறுதி மொழி ஏற்பு

0 360
Stalin trichy visit

திருச்சி, ஜன.31 திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தினவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதி மொழியினை வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா, மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பேபி, மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.