புதிய எஸ்.பி பொறுப்பேற்பு – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தில் ஈடுபடுவோர் மீது போக்சோ என எச்சரிக்கை!

0 618
Stalin trichy visit

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுஜீத் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றதும் தனி பார்வையாக மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் நில அபகரிப்பு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் விதமாக சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது மோட்டார் வாகன வழக்குகளை அதிக அளவில் பதிவு செய்யவும் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர்களுடைய வாகன உரிமத்தை ரத்து செய்யவும் காவல் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சைபர் குற்றங்கள் மற்றும் இணைய வழி வங்கி மோசடி ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் குற்றத்தை கட்டுப்படுத்துவதிலும் பொதுமக்களுடன் இணக்கமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். காவல் நிலையங்களில் வரப்படும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் இது அல்லது வழக்கு பதிவு கட்டாயம் செய்யப்பட வேண்டும் என அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளார் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.