மலைவாழ் மக்களுக்கு ஒரு நாள் பயிற்சி

0 502
Stalin trichy visit

திருச்சி உப்பிலியபுரம் வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளான காஞ்சேரி மலைபுதூர் ஒடுவம்பட்டி ஆகிய பகுதிகளில், வன விலங்குகளிடமிருந்து விவசாய பயிர்களை காப்பது பற்றிய மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் காஞ்சேரி, மலை புதூர், ஒடுவம்பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் செல்வகுமாரி தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் நல்லேந்திரன் முன்னிலை வகித்தார்.

முகாமில் காட்டுப்பன்றி, மயில் போன்ற வன விலங்குகளிடமிருந்து மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், நெல் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது குறித்து, சுற்றுச் சூழல் ஆர்வலர் புகழேந்தி விளக்கமளித்தார். முகாமில் பழங்குடியின மலைவாழ் மக்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். மேலும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரேம்சேகர், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சரண்யா, திவ்யபாரதி, உதவி வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.