“பி.எப். உங்கள் அருகில்” குறைதீர்க்கும் முகாம்; 10ம் தேதி நடக்கிறது!
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன திருச்சி மண்டல அலுவலகத்தில் பி.எப். உங்கள் அருகில் என்ற பெயரில் குறைதீர்க்கும் முகாம் இணையவழியில் வரும் 10ம் தேதி பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நடக்கிறது. இதில் வர்த்தக நிறுவனங்கள், தொழிலாளர்கள், வேலையளிக்கும் தொழில்முனைவோர்கள் மற்றும்
ஓய்வூதியதாரகள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் உலகளாவிய கணக்கு எண் (UAN), பி.எப். கணக்கு எண், இ-மெயில் ஐ.டி., செல்போன் எண் மற்றும் தீர்க்க வேண்டிய குறைகள் ஆகிய விவரங்களை 9-ந் தேதிக்கு முன்பாக ro.trichy@epfindia.gov.in. என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவலை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன திருச்சி மண்டல ஆணையர் எஸ்.முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.