சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3 நாட்களுக்கு 500 பேருக்கு உணவு பொட்டலங்களாக வழங்கப்படும்; கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல்

0 693
Stalin trichy visit

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும்,தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும் பல்வேறு பகுதிகளில் இருந்து கார்,பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும் பாதயாத்திரையாகவும் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக நாளொன்றுக்கு மதிய வேளையில் சுமார் 400 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களான திருச்செந்தூர் முருகன் கோவில் திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில் சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் தொடங்கியது. திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இதில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினார். சாதம் சாம்பார் ரசம் மோர் கூட்டு பொரியல் வடை பாயாசம் அப்பளம் போன்றவை வழங்கப்பட்டது முதல் நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்டனர். இந்தத் திட்டத்தை பக்தர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில் மற்றும் வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடை சாத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இருப்பினும் மாரியம்மனின் தீவிர பக்தர்கள் கட்டுப்பாடுகளை மீறி தினமும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுமா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்தது. இதைத்தொடர்ந்து கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது., அரசின் விதிகளையும் மீறி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடு செல்லக்கூடாது என்ற நோக்கத்தோடு தினமும் 500 பேருக்கு உணவை தயாரித்து பொட்டலங்களாக வழங்கப்படும் என்றும், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை சாதம் சாம்பார் ரசம் மோர் கூட்டு பொரியல் அப்பளம் ஊறுகாய் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும், உணவு வகைகளில் மாற்றம் இல்லை என்றும் தெரிவித்தார், மேலும் ஒரு நாளைக்கு நான்கு காய்கறிகள் வீதம் நான்கு முறை சாம்பார் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகவும் இணை ஆணையர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.