திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி(55). இவர் மோட்டார் சைக்கிளில் கடலை வியாபாரி செய்து வந்தார். சம்பவத்தன்று துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த திருப்பதியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.