லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேர் கைது

0 374
Stalin trichy visit

 

திருச்சி, நவ. 18  திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே பழையபாளையம் பிரிவு சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை சிறிய நோட்டுகளில் எழுதி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், பிலாகொள்ளைப்பட்டியைச் சேர்ந்த தங்கதுரை (31), ஆர். பாலக்குறிச்சியைச் சேர்ந்த ஸ்ரீராம் ( 26), திருச்சி மாவட்டம், பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா ( 32) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த துவரங்குறிச்சி போலீசார் அவர்களிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்ட 7 சிறிய பில்புக் மற்றும் ரூ.11,707 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.