குடிநீர் இன்றி அவதிக்கு ஆளான மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

0 312
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், புத்தாநத்ததை அடுத்த எண்டபுளி பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதே போல் குடிநீர் இணைப்பு கேட்டு பணம் கட்டிய சிலருக்கும் ரசீது வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதனால் குடிநீர் இன்றி அவதிக்கு ஆளான மக்கள் எண்டபுளி பகுதியில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு முறையான குடிநீர் வழங்கிட வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநத்தம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.