இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல்திறன் தேர்வு தொடக்கம்

0 306
Stalin trichy visit

திருச்சி, பிப்.6 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான உடல் திறன் தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆனையம் சார்பில் நடத்தப்படும் இந்த தகுதி திறன் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு உடல் உடல் எடை மற்றும் உயரம் சரிபார்ப்பு உள்ளிட்ட உடல் திறன் தேர்வு திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் கே.கே நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று தொடங்கியது. உடல்திறன் தேர்வு 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இத்தேர்வில் நீளம்,உயரம் உள்ளிட்ட தேர்வு,1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் என ஒவ்வொரு உடல் திறன் அளவீடுகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அடுத்த கட்டமாக கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை 1752 நபர்கள் இந்த தகுதி திறன் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.