மணிகண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர் நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன் மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திருச்சி கிழக்கு மின்செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.