தனியார் வேலைவாய்ப்பு முகாம்; நாளை மறுநாள் நடக்கிறது

0 476
Stalin trichy visit

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகள் வழங்க உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-,ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு : 18 – க்கு மேல் 35 – க்குள்) கலந்துகொள்ளலாம். மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.