தனியார் நிதிநிறுவன ஊழியர் அராஜகம் : பெண் தற்கொலை முயற்சி

0 417
Stalin trichy visit

திருச்சி, செப். 3 திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே தீராம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(45) இவர் வாட்ஸ் மேன் வேலை செய்கிறார். இவரது மனைவி விசாலாட்சி(40) சித்தாள் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக விசாலாட்சி கடந்த 2022 ஆண்டில் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் மகளிர் சுய உதவி குழுவில் 40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதில் மாதம் 2 ஆயிரத்தி 200 முறை வீதம் மாத தவணை கட்டி வந்த நிலையில் தற்போது மீதி 4 தவணை இருக்கும் பட்சத்தில் இந்த மாத தவணையை அந்த நிதி நிர்வன ஊழியர் சுரேந்தர் என்பவர் தீராம் பாளையத்தில் உள்ள விசாலாட்சி வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது விசாலாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உடல் சூழ்நிலை சரி இல்லை என்பதால் பணம் நெருக்கடியாக உள்ளது இதனால் பணத்தை அடுத்த வாரம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதை ஏற்க மறுத்த நிதி நிறுவன ஊழியர் சுரேந்தர் விசாலாட்சியிடம் தரை குறைவாகவும் பேசி தகாத வார்த்தைகள் திட்டியுள்ளார். இதையடுத்து விசாலாட்சி சுரேந்திரிடம் மரியாதையாக பேசவும் நான் உங்களுக்கு தாய் மாதிரி என்று கூறியுள்ளார். அதையும் பொருட்படுத்தாத சுரேந்தர் நீ இறந்து விடு இறந்துவிட்டால் இன்ஷூரன்ஸ் பணம் வரும் அதை நாங்கள் கிளைம் செய்து கொள்கிறோம் என கூறி விசாலாட்சி வீட்டுக்குள் வைத்து வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார் இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து விசாலாட்சியின் வீட்டின் பூட்டை உடைத்து மீட்டனர்.

மேலும் இச்சம்பவத்தில் மன உளைச்சலில் இருந்த விசாலாட்சி கணவர், குழந்தைகள் இல்லாத சமயத்தில் வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
பின்னர் வேலை முடித்து வீட்டிற்கு வந்த கணவர் சிவகுமார் விசாலாட்சி மயங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு விசாலாட்சியிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்தை குறித்து சிவக்குமார் உறவினர்கள் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் முருகையன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விசாலாட்சி சுமார் 5 சுய உதவி குழுக்களில் கடன் வாங்கியது அதை மாதம் மாதம் தவறாமல் கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் இந்த மாதம் என்ன நெருக்கடி நிலை என்று தெரியவில்லை ஒரு வாரம் கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிதி நிறுவன ஊழியர் கேட்காமல் விசாலாட்சியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு நீ சாவு என்று கூறி சென்றுவிட்டார் இதனால் மன உளைச்சலில் விசாலாட்சி அரளி விதை குடித்துவிட்டார் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மண்ணச்சநல்லூர் போலீசார் அந்த நிதி நிறுழனம் மற்றும் நிதி நிறுவன ஊழியர் சுரேந்தர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விசாலாட்சி விஷம் அருந்தியதை அறிந்த சுரேந்தர் தற்போது தலைமறைவாக உள்ளார். மண்ணச்சநல்லூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர் பகுதியில் நிதி நிறுவனத்தின் அராஜகம் அதிகரித்து வருகிறது கடந்த பிப்ரவரி மாதம் திருவெள்ளறையில் டீ மாஸ்டர் மனைவி, ஜூலை மாதம் கிழக்கு காமராஜர் நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சென்ற மாதம் நொச்சியத்தில் ஒரு பெண் என மகளிர் சுய உதவி குழு ஊழியர்கள் கொடுக்கும் நெருக்கடி தற்கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தீராம்பாளையம் கிராமத்தில் விசாலாட்சி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனால் மண்ணச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.