திருச்சி மாவட்ட வேலைவாய்ப்ப்கத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை ( வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த வேலை வழங்குவோர் மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான ஆட்களை தோ்வு செய்வதற்காக நடைபெறும் முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவா்கள் பங்கேற்கலாம். தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும்.
இந்த முகாம் மூலம் வேலை பெறுவோரது வேலைவாய்ப்பகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அவா்களது பதிவு மூப்பு விவரங்கள் அப்படியே தொடரும். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.