வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் : 3 பேர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை, ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சோடாஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வீட்டை கரூர் மாவட்டம், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பானுமதி ( 50) என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் சட்ட விரோதமாக பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வப்துள்ளார். இதுகுறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா பானுமதி, கரூர் மாவட்டம் மைலம்பட்டியைச் சேர்ந்த அமீர் (23), சல்மான்கான் (24) ஆகிய மூன்று பேரையும் கைது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.