சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, ஜன.31 திருச்சி மாவட்டம்,திருவெறும்பூர் வட்டம், குவளாக்குடி கிராமத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சிர் பிரதீப்குமார் அரசு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு 283 பயனாளிகளுக்கு ரூ.58.50 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், வட்டாட்சியர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் அழகு கே.செந்தில், அரசுத்துறை அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.