கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

0 266
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வடக்கிப்பட்டியில் முக்தீஸ்வரர் மற்றும் பூர்த்தி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள 29 பேர் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும் இதுதொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மணப்பாறை தாசில்தார் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தற்போது மழை காலம் என்பதால் மக்கள் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் உள்ளதாகவும், தங்குவதற்கு வேறு வீடுகள் இல்லலாததால் கூடுதலாக 25 நாட்கள் அவகாசம் வழங்குவதாக மணப்பாறை தாசில்தார் சேக்கிழார் தெரிவித்ததை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் கண்ணன் உள்ளிட்டடோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.