திருச்சி பிரதான சாலையில் உயிர் காவு வாங்க காத்திருக்கும் உறைகிணறுகள்

0 454
Stalin trichy visit

திருச்சி தில்லைநகர் பிரதான சாலை தற்பொழுது சீரமைக்கப்பட்டு முழுமையாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்படும் பொழுது தில்லைநகர் மேற்கு புறம் முழுவதும் மழை நீரை சேமிக்கும் பொருட்டு ஆங்காங்கே மழைநீர் உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்க தக்க ஒன்றாகும்.

ஆனால் இந்த சாலையில் கடமைக்கு உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‌உறை கிணற்றிற்கு ஒன்றிற்கு கூட மேல் மூடி அமைக்கப்படவில்லை என்றும், இதனால் சாலையோரத்தில் நடக்கும் பாதசாரிகள் இரவு நேரத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், உறை கிணறு அமைந்துள்ள பகுதிகளில் கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால்_பெரும்பாலான உறை கிணறு உடைந்துவிட்டதாகவும், உறை கிணற்றில் சாலை மட்டத்திற்கு மண் நிரம்பிவிட்டது என்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.