திராவிட இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரும், அன்பில் தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவருமான, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி துணைச்செயலாளருமான அன்பில் பொய்யாமொழி 22ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என் சேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் என் கோவிந்தராஜன் வண்ணைஅரங்கநாதன் செந்தில் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே.எஸ்.எம் கருணாநிதி மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன், ஒன்றிய கழகச் செயலாளர் சபியுல்லா மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

click the image to chat on whatsapp