ஓய்வு பெற்றபின் ஓய்வூதியர்கள் வசம் பணிப்பதிவேடுகளை வழங்கிட கோரிக்கை!
திருச்சி மாவட்டம், முசிறி வட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செய லாளர் மாணிக்க ராமசாமி முன்னிலை வகித்தார். ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரிடம் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஓய்வு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் தொகையில் ரூ.350 தமிழக நிதித்துறையில் வைத்து ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் பயன் பெறும் வகையில் செயல்படுத்த தமிழக அரசை கேட்டுக்கொள்வது.
ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான பட்டியலில் பாம்பு கடிக்கான சிகிச்சையையும் சேர்த்து பயன் பெறும் வகையில் அரசு ஆணை வெளியிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது, தமிழக அரசு ஊழியர்களின் பணி சார்ந்த வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு நிர்வாக தீர்ப்பாயம் அமைக்க கேட்டுக்கொள்வது,
தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தணிக்கை துறை இயக்குனர் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று உதவி கருவூலங்கள் மாவட்ட கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் பணியில் சேரும் போது அவர்களின் முழு முகவரியுடன் கல்வித்தகுதி மற்றும் இதர விவரங்கள் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. பணி ஓய்வு பெற்ற பின்னர் பணிப்பதிவேடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களில்
வைத்துக்கொள்ளப்படுகிறது. அரசு ஆணையின்படி பயன்களை பெறுவதற்கு ஓய்வு பெற்றபின் ஓய்வூதியர்கள் வசம் பணிப் பதிவேடுகளை வழங்கிட அரசை ஆவன செய்ய கேட்டுக்கொள்வது, தமிழகத்தில் உள்ளாட்சி தணிக்கை துறை மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறைகளை களைய சங்க பிரதிநிதிகள் மூலம் குறைதீர் நாள் கூட்டம் நடத்திட அரசை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.