வீடு புகுந்து செல்போன் திருடிய இருவர் கைது!

0 296
Stalin trichy visit

திருச்சி கோட்டைஜான்தோப்பு பாரதியார் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 45). இவர் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டிற்குள் இருந்து 2 பேர் வெளியேறுவதைபார்த்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் சார்ஜர் போட்டு வைத்திருந்த செல்போன் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் சரவணன் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அதே பகுதி ஏகாம்பரம் பிள்ளை ஸ்டோரை சேர்ந்த ஜெகதீஸ்வரன்(வயது 20), கீழஆண்டார் வீதியை சேர்ந்த மோகன்(வயது 49) ஆகிய 2 பேர் செல்போனை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.