திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம்!

0 535
Stalin trichy visit

திருச்சி அரசு மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினந்தோறும் மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு அருகாமையில் கடந்த 3 நாட்களாக மருத்துவமனை கழிவுகள் மற்றும் நோயாளிகளின் கழிவுகள் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிகிச்சை பெறுவோரும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பைகளை அல்ல வண்டிக்குப் பணம் கொடுக்காததால் குப்பைவண்டி வருவில்லை என கூறப்படுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் நிலையில் உள்ள குப்பைகளை உடனடியாக மருத்துவமனை நிர்வாகமும் மாநகராட்சியும் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.