திருச்சி என்.ஐ.டி.யில் ரூ.38 கோடியில் மாணவிகள் விடுதி திறப்பு

0 489
Stalin trichy visit

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) ரூ.31.4 கோடியில் புதிதாக கட்டப்பட்ட மாணவிகள் தங்கும் விடுதி மற்றும் ரூ.7 கோடியில் மேம்பட்ட உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன் மையம் (CAMA) திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு என்.ஐ.டி. இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் தலைமை தாங்கினார்.
விழாவில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் பங்கேற்று விடுதி மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் 8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகளில் 5 பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி கற்பிக்கப்படும். இந்தக் கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதால், கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் திருச்சி.என்.ஐ.டி. முதலிடத்தை பெற்றமைக்கு பாராட்டுகள்.
புதிய விடுதி அதிக மாணவிகளை தொழில்நுட்பக் கல்விக்கு கொண்டு வருவதற்கான ஒரு படியாக இருக்கும் என நம்புகிறேன்.
தொலை நோக்குக்கு ஏற்ப மேம்பட்ட உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன் மையம் நிறுவுவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் இன்னும் உயர்ந்த நிலையை அடைய முடியும். திருச்சி என்.ஐ.டி.க்கு பன்முகத் தன்மை ஒரு முக்கிய கொள்கை ஆகும்.

மேம்பட்ட உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன் மையம் (CAMA) என்பது இடைநிலை கல்வி உதவித்தொகை மற்றும் ஆட்டோமோட்டிவ், பயோமெடிக்கல் மற்றும் பிற தொழில்களில் தொழில்-கல்வி கூட்டாண்மைக்கான நகர்வின் ஒரு பகுதியாகும். திருச்சி என்.ஐ.டி.யில் உள்ள மையங்கள் திருச்சியின் உள்ளூர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) திறன் மேம்பாட்டில் ஈடுபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு விடுதி மற்றும் சிறப்பு மையத்தின் வசதிகள் குறித்த காணொளி திரையிடப்பட்டது. திருச்சி என்.ஐ.டி., நிர்வாகக் குழுத் தலைவர் பாஸ்கர் பட், இந்தத் திட்டங்களின் தேசிய முக்கியத்துவத்தையும் , இவை புதிய கல்விக்கொள்கை 2020 – யுடன் ஒத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.