மது போதையில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை!

0 377
Stalin trichy visit

திருச்சி நாச்சிக்குறிச்சி கைராசி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 72). இவரது மகன் ஜெகதீஸ்(வயது 46). திருவெள்ளரை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர், தனது மனைவியுடன் சோமரசம்பேட்டை ரங்கலட்சுமி நகரில் வசித்து வந்தார். குடிபழக்கம் உள்ள ஜெகதீஸ்க்கு, சந்திரசேகரன் உணவு எடுத்துச் சென்றார். அப்போது ஜெகதீஸ் குடிபோதையில் இருந்துள்ளார். இதையறிந்த பெற்றோர்

 

ஜெகதீசையும், மருமகளையும் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஸ், வீட்டை பூட்டிக் கொண்டு மது அருந்தியுள்ளார். உணவு கொடுக்க ஜெகதீஸ் அறையை அவரது மனைவி நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெகதீஸ் வேஷ்டியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.