மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், பர்மா காலனி நேதாஜி சாலையில் உள்ள சாக்கடை கழிவுகளை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணியையும் , பிலோமினாள் புரம் முதல் தெருவில் புதிதாக கல்வெட்டு பாலம் கட்டும் பணியையும் , தெற்கு காட்டூர் காமராஜர் தெருவில் புதிதாக கல்வெட்டு பாலம் அமைத்திட வேண்டிய பணியையும், பர்மா காலனி முத்து மாரியம்மன் கோயில் அருகில் தெருவினை சுத்தம் செய்தல் பணியையும், பர்மா காலனி நேதாஜி சாலையில் சாக்கடை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.