முசிறி சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 4 வழக்குகளுக்கு தீர்வு
முசிறி சார்பு நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்
முசிறி சார்பு நீதிமன்றத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட மூன்றாம் கூடுதல் சார்பு நீதிபதி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
முசிறி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாக்யராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன வழக்கில் ஒரு வழக்கின் பயனாளிக்கு 18 லட்சத்து 50 ஆயிரத்திற்கான இழப்பீட்டுத் தொகையும், சார்பு நீதிமன்ற அசல் வழக்குகள் மூன்றுக்கும் சமரசம் பேசப்பட்டு தீர்வு தொகை 14, லட்சத்து 22 ஆயிரத்து 780 வழங்கப்பட்டது. மொத்தம் நான்கு வழக்குகள் முடிக்கப்பட்டு, வழக்காடிகளுக்கு அதற்கான உத்தரவு நகல்கள் வழங்கப்பட்டது. மொத்தம் ரூபாய் 32 லட்சத்து 72 ஆயிரத்து 800 காண தொகை வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வில் அரசு வழக்கறிஞர் சப்தரிசி , வழக்கறிஞர் சங்கத் தலைவர் மருதையா, செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், இணை செயலாளர் பத்ம ராஜா, பொருளாளர் முருகானந்தம், வழக்கறிஞர்கள் ராஜன், கதிரேசன், சுகுமார், முத்துச்செல்வன், பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் கலந்து கொண்டானர்.