வன்முறையை தூண்டும் பேச்சு : இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கைது!

0 318
Stalin trichy visit

மணப்பாறை அருகே பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி தலைக்கு 50 கோடி
இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் அதிரடி கைது.

சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சுக்குப் பின் பல்வேறு தரப்பினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையான விமர்சித்ததோடு அவரின் தலைக்கு 10 கோடி ரூபாய் என்று சாமியார் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் கடந்த 19 ம் தேதி நடைபெற்ற விநாயகர் சதூர்த்தி நிகழ்ச்சி பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் தண்டபாணி ( வயது 44) என்பவர் பேசும் போது அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டி எடுத்து வந்தால் 50 கோடி தருவதாகவும், அந்த தொகையை பிச்சை எடுத்து தருவதாகவும் கூறியது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தது. இந்நிலையில் பொது இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டபாணியை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மணப்பாறை கிளை சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.