மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

0 417
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் வட்டார வளமையத்தில் 29 11 2022 அன்று மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான ஒன்றியம் வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியில் 35க்கும் மேற்பட்ட மாற்று திறன் கொண்ட மாணவர்கள் பங்கேற்றனர் .

இவ் விளையாட்டு போட்டியானது மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களின் தனித்திரனை வெளிக்கொண்டு வரும் வகையிலும் மாற்றுத்திறன் மாணவர்களும் சக மாணவர்களுக்கு சமமானவர்கள் என்பதனை உறுதி செய்யும் வகையிலும் விளையாட்டு போட்டியானது ஒன்றிய அளவில் நடைபெற்றது. மேலும் விளையாட்டு போட்டியானது டிசம்பர் 3 அன்று உலக மாற்றத் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையிலும் போட்டிகளானது நடைபெற்றது. இப்போட்டியில் அனைத்து மாணவர்களும் ஓட்டப்பந்தயம், லெமன் ஸ்பூன், மியூசிக் சேர், பாட்டிலில் நீர் நிரப்புதல் போன்ற மற்ற பிற விளையாட்டுகளையும் விளையாண்டு மகிழ்ந்தனர் .பலூன் உடைத்தல் போட்டிகளில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பங்கு பெற்றனர்.

பெற்றோர்கள் மாணவர்களை கண்டு மிகவும் வியந்து கண்ணீர் மல்க அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். மாணவர்கள் அனைவரும் ஒருமனதோடு உற்சாகத்தோடு விளையாண்டனர். மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அந்தநல்லூர் வட்டார வளமைய கல்வி அலுவலர் திரு மருதநாயகம்,திரு.ஸ்டான்லி ராஜசேகர் மற்றும் வட்டார வள மேற்பார்வையாளர் அவர்கள் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கியும் பதக்கங்கள் வழங்கியும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள். மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் விளையாட நோக்கத்தையும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் அதிகரிக்கும் வகையிலும் அவர்களாலும் மற்ற மாணவர்கள் போல் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை யையும் மாணவர்களுக்குவழங்கினார்கள். இப்போட்டியினை அவர் உற்சாகப்படுத்தி அனைத்து வகையான நலத்திட்டங்கள் எல்லாவற்றையும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் சார்பிலும் வட்டார வள மையம் மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர், சிறப்புப் பயிற்றுநர், இயன்முறை மருத்துவர் மற்ற சக ஊழியர்கள் சார்பிலும் எடுத்துரைத்துரைக்கப்பட்டது. அனைத்து மாற்று திறனாளி குழந்தை அவர்கள் பெற்றோர் அனைவருக்கும் தேநீர், பிஸ் கட் வழங்கப்பட்டது.விழா முடிவில் அனைத்து குழந்தைகள் , அவர்கள் பெற்றோருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.