குடும்ப பிரச்சனையில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி கூடலூர் செல்லும் சாலையில் உள்ள வயல்காட்டில் இருந்த மரத்தில் குடும்ப்ப் பிரச்சனை காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புள்ளம்பாடி அருகே கரையாம்பட்டி ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் காமராஜ்(47) இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக புள்ளம்பாடி கூடலூர் செல்லும் சாலையில் உள்ள வயல் காட்டில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கல்லக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ்இடத்திற்க்கு சென்ற கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.