வெறி நாய்களை கட்டுப்படுத்தக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் 10 பேரை வெறி நாய்கள் கடித்து குதறியது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்களோடு இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தலைமையில் அரியமங்கலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உடனடியாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நாய்களை பிடிக்கும் வாகனத்தை வரவழைத்து நாய்களை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கிச்சான், தீன், மாவட்ட செயலாளர் பா.லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாய்களை பிடிக்க மாநகராட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில் விரைவில் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நாய் விடும் போராட்டத்தை நடத்துவோம் என கூறினர்.