சாலை விபத்தில் ஒருவர் பலி – இருவர் காயம்

0 62

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ மணக்காலில் உள்ள லால்குடி அன்பில் சாலையில் நடந்து சென்றவர் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இருவர் காயமடைந்தனர்.

திருச்சி அரியமங்கலம் மேலக்களமலையைச் சேர்ந்தவர்  ராஜேந்திரன்(52) .இவர் நேற்று இரவு லால்குடி அன்பில் சாலையில் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கொப்பாவளி இந்திரா நகரை சேர்ந்த  வேலாயுதம் (42)  இரண்டு சிறுமிகளை மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு கொப்பாவளியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கீழ மணக்கால் பகுதியில் சென்ற போது ராஜேந்திரன் மீது மோட்டார் பைக் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தத ராஜேந்திரன் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மோட்டார் பைக்கில் வந்த இரண்டு சிறுமிகள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற லால்குடி போலீசார் விபத்தில் பலியான ராஜேந்திரன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த சிறுமிகள் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!