“அரசு பஸ்கள் இயங்காததால் ஆபத்தான பயணம்” நெரிசலில் சிக்கித்தவித்த மாணவிகள், பெண்கள்!

0 438
Stalin trichy visit

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்றும், நாளையும் இரண்டு

நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஎன்டியூசி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த

வேலைநிறுத்தப் போராட்டத்தினால் திருச்சியில் அரசு பஸ்கள் இயங்காததால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பஸ் கிடைக்காமல் தனியார் பஸ்களில் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனர். பெரிதும் மாணவிகள் பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.