தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் புறநகர் மாவட்ட முதல் மாநாடு
சமயபுரம் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் புறநகர் மாவட்ட முதல் மாநாடு நேற்று நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் சந்தைக்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட முதல் மாநாடு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அழகர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும், பழைய வாடகைதாரர்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்,
பழைய பாக்கி என்ற பெயரில் பல லட்சங்கள் நிர்ணயித்து காலிசெய்ய முயற்சிப்பதை கைவிடவும்,
குத்தகை பாக்கிகளை ததானியமாக வசூல் செய்திடவும்,
அரசாணை 318 ஐ அமல்படுத்த சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திடவும் உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் செயலாளர் முருகேசன், பொருளாளர் குருநாதன், துணைத்தலைவர் பிரபாகர், துணைச் செயலாளர் செல்லத்துரை மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, ஜெயபால், வாசுதேவன், ராஜ், பழனிச்சாமி, சக்திவேல், வடிவேல், ராஜேந்திரன், ராஜப்பன் உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.