குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

0 486
Stalin trichy visit

வையம்பட்டியை அடுத்த தவளவீரன்பட்டி அருகே உள்ள கிருஷ்ணகவுண்டனூரைச் சேர்ந்தவர் கோமதி (24). இவருக்கும், சிவலிங்கம் என்பவருக்கும் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 வயதில் ஒரு மகள் உள்ளார்.

 

சிவலிங்கம் கோவையில் உள்ள போர்வெல் வாகன டிரைவராக உள்ளார். இந்நிலையில் கணவன்– மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது. இதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கோவைக்கு சென்ற சிவலிங்கம் நேற்று முன்தினம் கோமதியிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகின்றது.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே மனமுடைந்த கோமதி நள்ளிரவில் அவரது தந்தை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.