வாலிபருக்கு கத்திக்கீரல் போட்ட வாலிபர் கைது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையத்தில் முன் விரோதத்தில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த வாலிபருக்கு கத்தியால் கிழித்ததில் படுகாயம் அடைந்தார். கத்தியால் கிழித்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர் ரெங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணா சுந்தரம். இவரது மகன் 22 வயதான நிகில். அதே போல் மண ணச்சநல்லூர் காந்திநகரைச் சேர்ந்தவர் முருகேசன் .இவரது மகன் 23 வயதான அரவிந்த். இதில் காயம் பட்ட நிகலுக்கும் கத்தியால் கிழித்த அரவிந்துக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 ந்தேதி மதியம் காயப்பட்ட நிகில் மற்றும் அவரது நண்பர்களுடன் ராசாம்பாளையம் சர்ச் பின்புறம் உள்ள நண்பரின் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அரவிந்த் நிகில்மீது பிளேடு கத்தியால் சரமாரியாக கிழித்ததில் முதுகு இரண்டு காது மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்டவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் விசாரணை செய்தார். இதனைத் தொடர்ந்து அரவிந்த் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.