லால்குடியில் தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

0 106
Stalin trichy visit

திருச்சி, ஏப். 4 திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சரும்,தவெக தேர்தல் கண்கணிப்பாளருமான கு.ப. கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய வேட்பாளர் கு.ப கிருஷ்ணன்
அனைத்து தலைவர்களும்
எல்லா தொகுகளுக்கும் பிரச்சாரத்திற்கு வருவார்கள்.ஆனால் ஒரு வேட்பாளருக்கு தொகுயின் முழு விவரமும் தெரிய வேண்டும்.சாலை முழுக்க நெல் குவியல் குவியலாக கூட டிக் கிடக்கிறது.இதற்கு அதிமுக,திமுக என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,வேளாண் என்பது எங்களது குலத்தொழில்.இந்த தொகுதி என்னுடைய தொகுதி. இந்த தொகுதியில் நடைபெற்ற எல்லா நிகழ்வுகளுக்கும் வந்திருக்கிறேன்.இந்த தொகுதியில் என்னைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.இந்த தொகுதியில் நின்று வெற்றிப் பெற்ற பிறகும் 5 வருடம்,10 வருடம் வாராதவர்களையெல்லாம் பார்த்துவிட்டு இன்றைக்கு எங்கிருந்தோ ஒருவரை அதிமுக இறக்குமதி செய்துள்ளது. உண்மையைச் சொன்னால் அதிமுகவைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன்,வேதனைப்படுகிறேன்.இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கட்சிக்கு இந்த அவல நிலையை கொண்டு போயிருக்கக் கூடாது.அதிமுக ஒருகாலத்தில் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.இதற்கு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.இங்கு யாருக்காவது ஒருவருக்கு கொடுத்திருக்கலாம் யாருமே இல்லாமலா போனார்கள் அவர்கள் பணத்தை வைத்து மிரட்டுகிறார்கள்.அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை.நாங்கள் பணங்காட்டு நரிகள் என புரிந்து கொள்ளவேண்டும் என பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.