கோரிக்கையை வலியுறுத்தி 57-வது நாளாக தொடர் போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, நைஜீரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கையைச் சேர்ந்த அகதிகள் 37 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினார்கள். சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும்.
அனைவரையும் போல் தங்களது குடும்பத்துடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 57-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நீடித்தது.