திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021-ன் போதும் மற்றும் 2021-க்கு முன்பாகவும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு மின் வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் பிரத்யேகமாக இன்று சனிக்கிழமை காலை 11 மணியில் இருந்து இரவு 12 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் வாக்காளர்கள் தங்கள் மின் வாக்காளர் அடையாள அட்டையினை தங்கள் அலைபேசி, கணினி மற்றும் மடிக்கணினி மூலம் பதிறிக்கம் செய்து கொள்ளலாம்.
https://NVSP.in/ இணையதளத்தில் பதிவு செய்து உள் நுழைய வேண்டும். Voter helpline mobile app (Android/iOS) இணையதளத்தில் பதிவு செய்து உள்நுழைய வேண்டும். https://Voterportal.eci.gov.in/ இணையதளத்தில் பதிவு செய்து உள்நுழைய வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது படிவ எண்ணை உள்ளிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் OTP-ஐ சரிபார்த்து உள்ளிட வேண்டும். இ வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவிறக்கம் என்பதை தேர்வு செய்து தங்களது இ-வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
இதுவரை இ வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு ஏதுவாக இன்று சனிக்கிழமை காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தங்களது அலைபேசி வாயிலாகவும், கணினி மற்றும் மடிக்கணினி மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதர விவரங்கள் மற்றும் சந்தேகங்களை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட தேர்தல் துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய் தாசில்தார்களிடம் தொட்பு கொண்டு இதுவரை e-EPIC பதிவிறக்கம் செய்யாத வாக்காளர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி வாக்காளர் அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.