இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

0 355
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வாகைக்குளம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா ( வயது 27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 29) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்‌ கடந்த ஓராண்டாக சுகன்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அவரை வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்ளுமாறு சுகன்யா கூறியபோது திருமணம் செய்ய மறுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுகன்யா அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்த மணப்பாறை அனைத்து மகளிர் காவல் துறையினர் விக்னேஷ்குமாரை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.