சூப்பர் மார்க்கெட்டில் திருடியவர் கைது

0 70

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பணமங்கலம் தெய்வாசிட்டி நகரை சேர்ந்தவர் ஆனந்த் (42). இவர் நம்பர் 1 டோல்கேட் லால்குடி சாலையில் சூப்பர் மார்க்கெட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 20 ம் தேதி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை எதேச்சையாக ஆய்வு செய்தார். அப்போது வாடிக்கையாளர் போல கடைக்கு வந்த யாரோ ஒரு மர்ம நபர் கடையில் இருந்த பொருட்களை திருடி தான் வைத்திருந்த பேக்கில் போடுகின்ற காட்சி பதிவாயிருந்தது. இதனை அடுத்து மீண்டும் அந்த நபர் அடுத்த நாள் வாடிக்கையாளர் போல் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த பொருட்களை திருடி உள்ளார்.இதை கவனித்த கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொள்ளிடம் போலீசார் அந்த நபரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் திருச்சி பெட்டவாய்த்தலை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த  சரண்ராஜ்(29)  என தெரிவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!