பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த ஹெல்மெட் கொள்ளையர்கள்
திருச்சி, நவ.23 திருச்சி வயலூர் சாலை அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் சத்யா. இவர் தனது குழந்தையை பள்ளிக்கு செல்ல அழைத்துச் சென்ற போது ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரின் அரசு மருத்துவமனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.